மகாத்மா காந்தி நினைவகம் திறப்பு

காந்தி ஜெயந்தியையொட்டி போத்தனூரில் மகாத்மா காந்தி நினைவகம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-10-02 18:45 GMT


காந்தி ஜெயந்தியையொட்டி போத்தனூரில் மகாத்மா காந்தி நினைவகம் திறந்து வைக்கப்பட்டது.

காந்தி நினைவகம்

கடந்த 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி போத்தனூரில் மகாத்மா காந்தி தங்கிய ஜி.டி. நாயுடு குடும்பத்தின் சிறிய ஓட்டு வீடு நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.

காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, கோவை செட்டிப்பாளையம் ரோடு போத்தனூரில் இந்த நினைவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. சமூக ஆர்வலர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்த நினைவகத்தை திறந்து வைத்தார்.

நினைவு பொருட்கள்

நினைவகத்தில் கோவைக்கும், காந்திக்கும் உள்ள வரலாற்று தொடர்பை விளக்கும் புகைப்படங்கள், காந்தி பயன்படுத்திய பொருட்களின் மாதிரிகள், காந்தியை பற்றிய அரிய நூல்கள், காந்தி எழுதிய கடிதங்கள், காந்தியின் ஆவணப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி, மாணவ-மாணவிகள் உள்பட பலரும் இந்த நினைவகத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

விழாவில் ஜி.டி. நாயுடு மகன் கோபால், கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கிருஷ்ணராஜ் வாணவராயர், சுவாமி ஹரிவரதானந்தா, குழந்தைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்