ஐம்பெரும் மன்றங்கள் தொடக்க விழா
கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் மன்றங்கள் தொடக்க விழா நடந்தது.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகிய ஐம்பெரும் மன்றங்களின் தொடக்க விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சமூக அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் செந்தில்வேலன், கரிக்கலாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை சுமத்திரா தேவி, வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் தமிழரசன், சமூக அறிவியல் ஆசிரியை சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றை தொடங்கி வைத்து பேசினார்கள்.
முன்னதாக பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணித ஆசிரியை கீதா நன்றி கூறினார்.