நம்பியார் நகரில் ரூ.34¼ கோடியில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு

நாகை நம்பியார் நகரில் ரூ.34¼ கோடியில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டது.

Update: 2023-03-09 18:45 GMT

நாகை நம்பியார் நகரில் ரூ.34¼ கோடியில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டது.

மீன்பிடி துறைமுகம்

நாகை நம்பியார் நகரில் மீன்பிடித்தல் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் 69 விசைப்படகுகள், 423 சிறிய படகுகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என நம்பியார் நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நம்பியார் நகரில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தன்னிறைவு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக நம்பியார் நகர் பகுதி மக்கள் சார்பில் ரூ.11 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டது.

ரூ.34¼ கோடி

இந்த தொகையுடன் அரசு ஒதுக்கீடு செய்த நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.34 கோடியே 30 லட்சம் செலவில் நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகத்தை சென்னையில் இருந்தபடி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் கூடுதல் கலெக்டர் பிரித்திவிராஜ் ரிப்பன் வெட்டி துறைமுகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் துறைமுகத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் சுரேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்