ராதாபுரத்தில் ரூ.1.60 கோடியில் மீன்வளத்துறை அலுவலகம் திறப்பு விழா

ராதாபுரத்தில் ரூ.1.60 கோடியில் மீன்வளத்துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-03-10 19:50 GMT

ராதாபுரம்:

நெல்லை மாவட்டத்தில் உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. எனவே புதிய கட்டிடம் கட்ட அரசு சார்பில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ராதாபுரம் தாலுகா அலுவலக மெயின் ரோட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.

தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதையொட்டி ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி, சிதம்பரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், மாவட்ட கவுன்சிலர் ஜான்ரூபா மற்றும் மீனவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்