கைதிகளுக்கான போதை மறுவாழ்வு மையம் திறப்பு

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கான போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-28 18:23 GMT

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கான போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. போதைக்கு அடிமையான கைதிகள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடாமல் சட்ட விரோதமாக ஜெயிலிலே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது நடத்தப்படும் சோதனைகளில் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலிலும், பெண்கள் ஜெயிலிலும் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் போதைக்கு அடிமையானவர்களை இருந்து மீட்கும் வகையில் ஜெயிலில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி நேற்று திறந்து வைத்தார். சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். இதில் சிறைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்கள் சிறையில் 10 படுக்கைகள் கொண்ட மையமும், பெண்கள் சிறையில் 5 படுக்கைகள் கொண்ட மையமும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு போதைப்பழக்கத்துக்கு அடிமையான கைதிகளுக்கு உரிய கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்