குடிநீர் தொட்டி திறப்பு விழா
மூலைக்கரைப்பட்டியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் நிலையம் கீழ்புறமுள்ள சின்டெக்ஸ் தொட்டி, தெற்கு பஸ்நிலைய சின்டெக்ஸ் தொட்டி மற்றும் தெற்கு பஸ்நிலைய சுகாதார வளாகம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதிமோகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் இரா.நடராஜன், துணைத்தலைவர் நம்பி ரமேஷ், கவுன்சிலர்கள் சொர்ணம், விஜயராணி, மாரியம்மாள், முத்துக்குமார், ஆதம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.