ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடக்கம்
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடக்கம்
-
ராமநாதபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை மண்டலத்தில் இருந்து பிரித்து ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் பத்திர பதிவு மண்டல அலுவலகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.. இந்த மண்டல அலுவலகத்தின்கீழ் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். இந்த புதிய பத்திரப்பதிவுத்துறை மண்டல அலுவலகம், மதுரையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், குத்து விளக்கு ஏற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் ரத்தினவேல், ரமேஷ், ராமநாதபுரம் நாகராட்சி தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர் பிரபாகரன், பத்திரப்பதிவு கண்காணிப்பு அலுவலர்கள் சீனிவாசன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.