அங்கன்வாடி மையம் திறப்பு விழா

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

Update: 2022-11-12 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி, அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்