புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் திறப்பு விழா

கோடியக்காடு புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-03-10 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்மணி தேசியக்கொடி ஏற்றி வைத்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் நீலமேகம் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்