குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா
பரப்பாடியில் குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் பரப்பாடியில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நேற்று அதன் தொடக்க விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் வீடுகளுக்கு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஏ.விஜி, நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், வி.யோவான் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.