அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறப்பு விழா
மல்லாங்கிணறு, காரியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
காரியாபட்டி,
மல்லாங்கிணறு, காரியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திறப்பு விழா
காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் காரியாபட்டியில் அரசு துணை சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மல்லாங்கிணறு
இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், காரியாபட்டி முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ், முன்னாள் நகர துணை செயலாளர் கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.