தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா
செவ்வத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி புரவலர் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணன், தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வை.அரசு வரவேற்றார், திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு தமிழ் இலக்கிய மன்றத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்து 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா ஆகியவற்றையும் வழங்கியும் பேசினார்.
சிறப்பு பேச்சாளர் கீரை பிரபாகரன், 'நதி போல் ஓடிக்கொண்டிரு' என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. எஸ்.அன்பழகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மோகனா, சிறப்பு ஆசிரியர்கள் எஸ்.ராஜசேகரன், டி.ஆர்.சுரேஷ்குமார் உள்பட பலர் பேசினர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எம்.சங்கர் நன்றி கூறினார்.