விளாத்திகுளத்தில்தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
விளாத்திகுளத்தில் தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில், தி.மு.க. சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜீ.வி.மஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மதுரை நகர செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் சிறப்பாக அமைப்பாளராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் பேசினார். இக்.கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், ஓட்டப்பிடாரம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் நகர, ஒன்றிய, இளைஞரணி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.