விளாத்திகுளத்தில்குதிரை வாகனத்தில் அய்யப்ப சுவாமி வீதி உலா

விளாத்திகுளத்தில் குதிரை வாகனத்தில் அய்யப்ப சுவாமி வீதி உலா நடந்தது.

Update: 2022-12-27 18:45 GMT

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல பூஜையை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அய்யப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு, கீழ ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்