வைப்பாரில்தொழிலாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கல்

வைப்பாரில் தொழிலாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Update: 2023-02-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்துக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வைப்பாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி நலவாரிய உறுப்பினர் அட்டையை வழங்கி பேசினார். அப்போது, தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை இலவசமாக பதிவு செய்து தரப்படும். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். எனவே தொழிலாளர்கள் பால்ராஜ் 63802 09674 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் வைப்பார் பஞ்சாயத்து தலைவர் சக்கம்மாள் ராமர், வைப்பார் கிராம தர்மகர்த்தா வீ.வீரமல்லு, சமுதாய தலைவர் முத்துராமலிங்க நாயக்கர், ஐ.என்.டி.யூ.சி.வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் வி.முருகதுரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்