விழுப்புரத்தில் தேசிய சட்டசேவை நாள் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் தேசிய சட்டசேவை நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய சட்டசேவை நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இப்பேரணிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பூர்ணிமா தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.