வெள்ளித்திருப்பூரில்பிறந்து 47 நாட்களான குழந்தை சாவு

குழந்தை சாவு

Update: 2023-02-17 20:54 GMT

வெள்ளித்திருப்பூரில் பிறந்து 47 நாட்களான குழந்தை இறந்தது.

47 நாட்களான குழந்தை

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழிலாளி. அவரது மனைவி சித்ரா (25). இவர்களுக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.

சாவு

இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே குழந்தையை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் அந்தியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்