வீரபாண்டியில்மாமியாரை கத்தியால் குத்தியவர் கைது

வீரபாண்டியில் மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

தேனி அல்லிநகரம் மருதையன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவரது மனைவி ஷீலா (30). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் ஷீலாவின் தாய் முத்துலட்சுமி (35) ஏன் இப்படி பிரச்சினை செய்கிறீர்கள் என்று பாா்த்திபனிடம் கேட்டார். அப்போது பார்த்திபன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முத்துலட்சுமி சிலருடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த பார்த்திபன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் ஷீலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பார்த்திபனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்