வேதாரண்யத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
வேதாரண்யத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. இதில் 340 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜன் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், வட்டார கல்வி அலுவலர் ராஜாமாணிக்கம், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.