வேதாரண்யத்தில் வீட்டை சூறையாடிய 2 பேர் கைது
வேதாரண்யத்தில் வீட்டை சூறையாடிய 2 பேரை போலீகார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மணியன்தீவு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ஜெயலட்சுமி (வயது45). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சங்கா் (43), சித்திரவேலு (56), சோமு உள்பட பலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சித்திரவேலு, சங்கர் ஆகியோர் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று அவரையும், அவரது மகளையும் தரக்குறைவாக திட்டி வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் (பொறுப்பு) பசுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கா், சித்திரவேலு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் சோமு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பலரை தேடி வருகின்றனர்.