வானரமுட்டி கிராமத்தில்கொசுப்புழு ஒழிப்பு பணி

வானரமுட்டி கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணி நடந்தது.

Update: 2023-03-16 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் கோவில்பட்டி துணை சுகாதார இளநிலை பூச்சியியல் வல்லுநர் முருகேசன், நல கல்வியாளர் முத்துசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், விஜயகுமார், கார்த்திக் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொண்டனர். வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் தொட்டிகள், கல்உரல்கள், டிரம்கள், தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். அவற்றில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தனர். தொடர்ந்து தெருக்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் கொசுஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்