வானரமுட்டியில்தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

வானரமுட்டியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2022-12-29 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், வானரமுட்டி ஊராட்சி மன்ற தலைவர் இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழுகுமலை நகர செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மகாராஜன், கிளை செயலாளர்கள் மகேந்திரன், அப்பாசாமி, ராமமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், சேசுபால்ராயன், வளர்மதி, ஒன்றிய பொருளாளர் சந்திரன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்