வால்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா -தடுப்பு பணிகள் தீவிரம்

வால்பாறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

Update: 2022-07-28 16:10 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு

வால்பாறை நகராட்சி பகுதியில் இந்த மாதத்தில்  13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  வால்பாறை அருகில் உள்ள சக்தி எஸ்டேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு துப்புரவு களப் பணியாளர்கள் சக்தி எஸ்டேட் பகுதிக்கு சென்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தி உள்ளது.

உரிய பரிசோதனை

மேலும் சக்தி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. யாருக்காவது சளி இருமல் தொண்டை வலி காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வால்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று 10 பேருக்கு சளி மாதிரிகைகள் எடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக உணரக்கூடியவர்கள் உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்