உடன்குடி வில்லிகுடியுருப்பில் கோவில் கும்பாபிஷேக விழா
உடன்குடி வில்லிகுடியுருப்பில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி வில்லிக்குடியிருப்பு சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலையில் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் பூஜையில் இருந்து கும்பகலச நீர் எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் கோபுரத்திற்கு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.