உடன்குடி பகுதியில்வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு

உடன்குடி பகுதியில் அரசு திட்டபணிகளை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-06 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பகுதியில் வேளாண் திட்டணிகளை வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர், மத்திய திட்ட வேளாண்மை உதவிஇயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளை சந்தித்து தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கும் திட்டத்தின் கீழ் எள்ளு விவசாயத்துக்கு தேவையான விதைகளை வழங்கினர். மாநில விரிவாக்கத் திடங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மேலராமசாமியாபுரம் விவசாயிக்கு தென்னை மரம் ஏறும் கருவி வழங்கினர். தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தின் இருப்பு நிலை குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தனர். ஏற்பாடுகளை உடன்குடி வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்