தூத்துக்குடியில் உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு விளக்க கூட்டம்

தூத்துக்குடியில் உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு விளக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-07-13 18:45 GMT

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் 11-வது உலக தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாடு குறித்த முன் சந்திப்பு மற்றும் விளக்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் டி.ஆர். தமிழரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ். சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் பேசியதாவது:-

'தி ரைஸ்' அமைப்பானது உலகமெங்கும் இருக்க கூடிய தமிழ் தொழிலதிபர்களை இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பானது 21 நாடுகளில் உள்ளது. இதில் பல நாடுகளில் உள்ள தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது ஒரு நெட்வெர்க் தளமாகும். உலக தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாடு மலேசியாவில் இந்த மாதம் 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இது அனைத்து தொழில்துறையினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கு கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து இதுவரை 180 பேர் பதிவு செய்துள்ளளர்கள். பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் வருகை தர உள்ளார்கள். தூத்துக்குடியில் இருந்து இந்த மாநாட்டில் முதலீட்டர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிகமாக பங்கேற்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பெரீஸ் மகேந்திரவேல், சங்க செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்