தூத்துக்குடியில்தொழிலாளி குத்திக் கொலை

தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-01-18 18:45 GMT

தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தொழிலாளி

தூத்துக்குடி கிருபை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). கூலித்தொழிலாளியான இவர், பழைய இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை முனியசாமிபுரம் மேற்கு பகுதியில் பாண்டி நடந்து வந்து கொண்டு இருந்தாா்.

குத்திக்கொலை

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென பாண்டியை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி தனது உறவினர் ஒருவரை கொலை செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்துள்ளார். அதன்பிறகு அவருடன் உறவினர்கள் யாரும் நெருக்கம் காட்டவில்லை. இதனால் தனது மனைவி கைகேயி என்பவருடன் தனியாக வசித்து வந்து உள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாக பாண்டியை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்