தூத்துக்குடியில்தொழிலாளி வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-08-30 18:45 GMT

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

உப்பளத்தில் பிணம்

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இருந்து அய்யனார்புரம் செல்லும் வழியில் உப்பளங்கள் உள்ளன. இதில் 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

பிணமாக கிடந்தவர் சட்டையும், லுங்கியும் அணிந்து இருந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர்.

அதன்பேரில் இறந்தவரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு போலீசாரின் பதிவேடுகளில் உள்ள கைரேகையுடன் ஒத்து போகிறதா? என்று பரிசோதித்தனர். அப்போது கைரேகையை வைத்து இறந்தவரை போலீசார் அடையாளம் கண்டறிந்து உள்ளனர்.

தொழிலாளி

அதாவது தாளமுத்துநகரை சேர்ந்த சிலுவைபாக்கியம் (வயது 47) என்பவதும், கூலித் தொழிலாளியான அவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது.

ஆனால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்