தூத்துக்குடியில்காசநோய் கண்டறியும் முகாம்

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-18 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட காசநோய் துணை இயக்குநர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை காசநோய் பிரிவு சார்பில் மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட மேல அழகாபுரியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. முகாமில் சுற்று வட்டார பகுதி மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள் செல்வராஜ், கண்ணன், மலை விக்னேஷ், முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன், சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், பிரதீப், ஆஷிக், நுண்கதிர்வீச்சாளர் உடையார், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர் ராஜலட்சுமி, தன்னார்வ சுகாதார பணியாளர் கனக சாந்தி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்