தூத்துக்குடியில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடியில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-10-30 18:45 GMT

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மீன்வளர்ப்பு துறை சார்பில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஆன்லைன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், மீன்தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருட்களை நன்றாக அரைத்தல், மீன்தீவனம் பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல், காய வைத்தல், மீன் தீவன தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது. மீன்வளர்ப்புத்துறை பேராசிரியர் சா.ஆதித்தன் பயிற்சியை நடத்தினார்.

பயிற்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்