தூத்துக்குடியில் வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது

தூத்துக்குடியில் வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-09 18:45 GMT

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தை சேர்ந்தவர் தில்லைராஜன். இவருடைய மகன் ராஜா ரகுபதி (வயது 26). இவர் கடந்த 7-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் மாசிலாமணிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதந்திர ராஜா (32) என்பவர் குடிபோதையில் ராஜா ரகுபதியை வழிமறித்து தகராறு செய்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரை கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து, சுதந்திரராஜாவை கைது செய்தனர். இவர் பிரபல ரவுடியாவார். இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்