தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சமீர்வியாஸ் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 41). தொழிலாளி. இவருக்கும், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திராநகரை சேர்ந்த பிச்சையா மகன் ஸ்டாலின் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் மீனவர் காலனி பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த ஸ்டாலின் வழிமறித்து தகராறு செய்து ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தார்.