தூத்துக்குடியில் விபத்தில் வாலிபர் சாவு
தூத்துக்குடியில் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி சத்யா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தப்பன். இவருடைய மகன் துரைப்பாண்டி (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது முன்னாள் சென்று கொண்டு இருந்த காரை டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தி விட்டாராம். இதில் துரைப்பாண்டி சென்ற மோட்டார் சைக்கிள், காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.