தூத்துக்குடியில் போலீசார்-அரசு வக்கீல்கள் ஆலோசனை

தூத்துக்குடியில் போலீசார்-அரசு வக்கீல்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-20 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுலகத்தில் போலீசார், அரசு வக்கீல்களுடனான மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. கூட்டத்தில் அரசு வக்கீல்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்