தூத்துக்குடியில் நவராத்திரி விழா அம்மன் சப்பர பேரணி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடியில் நவராத்திரி விழா அம்மன் சப்பர பேரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-20 18:45 GMT

தூத்துக்குடி மாநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் அம்மன் சப்பர பேரணி தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு அனைத்து அம்மன்களின் சப்பர பேரணி கமிட்டி தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.வன்னியராஜ், ஒருங்கிணைப்பாளர் சு.மாயக்கூத்தன், பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், செயலாளர் ஆதிநாத ஆழ்வார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், அமைப்பாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சப்பர பேரணி விழா சிறப்பாக நடைபெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாவிளக்கு ஊர்வலம், பாரதமாதா ஊர்வலம் எஸ்.பி.எஸ்.கனகராஜ் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அனைத்து கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுக பாண்டி, மாடசாமி, தங்க குமார், பழனிவேல், முத்துகிருஷ்ணாபுரம், சிவராமகிருஷ்ணன், நாராயண ராஜ், ராகவேந்திரா, சரவணகுமார், செல்லப்பா, பாலசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்