தூத்துக்குடியில் கமலஹாசன் பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் கமலஹாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 68-ஆவது பிறந்தநாள் விழா மக்கள் நீதி மையம் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ட்ருத்புல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள 30 மாணவர்களுடன் இணைந்து கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் அந்த பயிற்சி மையத்தில் பினாயில் மற்றும் ஓமவாட்டர் ஆகியவைகள் தயாரிப்பதற்கான 2-மாத கால இலவச பயிற்சி வகுப்பினை மாணவர்களுக்கு கற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்த விழாவிற்கு ஊடகப்பிரிவு நெல்லை மண்டல பொறுப்பாளர் யோகேஷ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த விழாவில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தூத்துக்குடி நகரச் செயலாளர் சேர்மத்துரை, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.