தூத்துக்குடியில்சமத்துவ மக்கள் கழகம் தொடக்க விழா
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ மக்கள் கழகம் 8-வது ஆண்டு தொடக்க விழா தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் கட்சி கொடி ஏற்றினார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், அந்தோணி சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.