தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ஜெபராஜ் (வயது 28). லோடு மேன். இவர் ஜார்ஜ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ஜெபராஜை மடக்கி பிடித்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபராஜை கைது செய்தனர்.