தூத்துக்குடியில் இல்லம் தேடி தி.மு.க.இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை
தூத்துக்குடியில் இல்லம் தேடி தி.மு.க.இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லம் தேடி சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.