தூத்துக்குடியில்கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு சாவு
தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் மணி (வயது 46). கட்டிட தொழிலாளி. இவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதில் மனம் உடைந்த காணப்பட்ட அவர் திடீரென்று நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் சம்பவ வீட்டிற்கு ெசன்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.