தூத்துக்குடியில்கட்டிட காண்டிராக்டருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில் கட்டிட காண்டிராக்டருக்கு கத்தியால் குத்தப்பட்டார்.

Update: 2023-05-05 18:45 GMT

தூத்துக்குடி கோமஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). கட்டிட காண்டிராக்டர். இவரிடம் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (21), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பழனி மகன் சக்தி (21), சக்தி விநாயகர்புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் சுடலை ஆகிய 3 பேரும் கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேருக்கும் கூலி வழங்குவது தொடர்பாக, அவர்களுக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ஆனந்தனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலவிக்னேஷ், சக்தி, சுடலை ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்