தூத்துக்குடியில்காங்கிரசார் தெருமுனை பிரசாரம்

தூத்துக்குடியில் காங்கிரசார் தெருமுனை பிரசாரம் நடந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து தெருமுனை பிரசாரம் கந்தசாமிபுரத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மண்டல தலைவர் டி.சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் கற்பகக்கனி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்