தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தன. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து சுமார் 226 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 8, 10, 12 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய 3 பிரிவுகளில் நடந்தன. போட்டிகளை கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டி.ஆர்.பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மெலின்டா சூசன்தாமஸ், ராஜே ஷ்குமார், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.