தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் பிரசார பயணம் தொடக்கம்

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் பிரசார பயணத்தைதொடங்கினர்.

Update: 2023-07-20 18:45 GMT

இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை பாதுகாக்கவும், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், "வங்கிகளைக் காப்போம், தேசத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் வங்கி ஊழியர்களின் பிரசார பயணம் தமிழ்நாடு முழுவதும் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மையங்களிலிருந்து தொடங்கி திருச்சியில் நாளை(சனிக்கிழமை) முடிவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. அதன்படி, வங்கி ஊழியர்களின் பிரசார பயணம் தூத்துக்குடியில் வி.இ.சாலையிலிருந்தும், கடற்கரை சாலை ஸ்டேட் வங்கி முன்பிருந்தும், வ.உ.சி.கல்லூரி முன்பிருந்தும் தொடங்கியது.

இதில், தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி முன்பு தொடங்கிய பிரச்சார பயணத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்கத் மாவட்ட செயலர் கார்த்தி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் ரசல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் முருகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன மாவட்ட ச் செயலர் தங்க மாரியப்பன், துறைமுக லேபர் டிரஸ்டி பாலகிருஷ்ணன், அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்