தூத்துக்குடியில்இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
தூத்துக்குடியில் இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி சின்னமணி இறகுபந்து கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 120 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு இறகு பந்து கழக தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார். வ.உ.சி கல்விக்குழு செயலாளர் ஏ.பி.சி.வி. சண்முகம், மீளவிட்டான் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜவஹர், ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன், மற்றும் கந்தசாமி, ரமேஷ், குமாரமுருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.