தூத்துக்குடியில் கடை ஊழியர் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்திய டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-09 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியம். இவருடைய மகன் பிரசன்னா (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ந் தேதி ஒரு வாடிக்கையாளரின் வீட்டுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சேர்க்க டிராக்டர் டிரைவரான தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு பெரியசாமி நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்துராமலிங்கம் (25) என்பவரை அழைத்து உள்ளார்.

ஆனால் முத்துராமலிங்கம் வர தாமதமாகி உள்ளது. இதனால் பிரசன்னா வேறு ஒரு டிராக்டர் மூலம் கட்டுமான பொருட்களை அனுப்பி வைத்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கம், பிரசன்னாவை அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து, முத்துராமலிங்கத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்