தூத்துக்குடியில்495 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்

தூத்துக்குடியில் 495 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்து புதைக்கப்பட்டது.

Update: 2023-08-09 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு மாட்டு இறைச்சிக் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போன்று உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் கெட்டுப் போன நிலையில் இருந்த 495 கிலோ பழைய மாட்டு இறைச்சி கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மாட்டிறைச்சி மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு பினாயில் ஊற்றி புதைக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடியில் பெரும்பாலான டீக்கடைகளில் வடை உள்ளிட்டவை உரிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று இறைச்சி கடை உள்ளிட்ட உணவு விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்