தூத்துக்குடியில்கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்தனர்.

Update: 2023-01-19 18:45 GMT

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி செல்சினி காலனி மெயின் ரோடு பகுதியில் நின்று கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் முகேஷ் (வயது 23), தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (21) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்