தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகர, பேரூராட்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர் ஒன்றியம், நகரம், ஆறுமுகநேரி, கானம் பேரூராட்சிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருச்செந்தூர் கே.டி.எம். திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் மேற்கு, வடக்கு ஒன்றிய செயல்விரர்கள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு புதியம்புத்தூர் அருகில் உள்ள கனி மகாலில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றியச் செயல்விரர்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி ஸ்ரீபத்திரகாளியம்மன் கலையரங்கத்தில் நடக்கிறது. இந்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சி முன்னணியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.