தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது என மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-20 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இன்று (புதன்கிழமை) ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி கூட்டம் ஏரல் சந்திரா தியேட்டர் அருகே உள்ள மைதானத்தில் எனது தலைமையில் நடக்கிறது.

நாளை (வியாழக்கிழமை) தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெரு மெயின் ரோடு, அண்ணா நகர் சந்திப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நானும், தலைமைக் கழக பேச்சாளர்களும் பேசுகிறோம். வருகிற 24-ந் தேதி திருச்செந்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நானும், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றோம்.

இந்த பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகளும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். மாநகர வட்ட, நகர, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்